உணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க

Care For Food Allergies

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பு:

கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.

அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.

கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.


பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

1.வஜ்ராஸனம்
2. சீ’தலீகும்பகம்
3. ஸீத்காரீ ப்ராணாயாமம்
4. ஸமானகும்பகம்
5. பஸ்த்ரிகாகும்பகம்

1. வஜ்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
  2. வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
  3. கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
  4. நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
  5. இந்நிலையில் 30 நொடிகள் அமரவும்.
2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
சீ’தலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74(விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
  2. கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
  3. நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
  4. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  5. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
  6. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
  7. இதை 21 முறைகள் செய்யவும்.

3.வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
ஸீத்காரீ ப்ராணாயாமம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
  2. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
  3. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
  4. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.
  5. இதை 21 முறைகள் செய்யவும்.

 4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
ஸமானகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுக்கவும்.
  2. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவுவதாக பாவனை செய்யவும்.
  3. பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
  4. உங்களால் உள்ளே மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது சுவாசத்தை வெளிவிடவும்.
  5. இதனை 21 முறைகள் செய்யவும்.

 5. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுக்கவும்.
  2. உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்தவும். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
  3. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
  4. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
  5. இதனை 21 முறைகள் செய்யவும்.

 

இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.