உயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா

Cure for Hypertension

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பு:

கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.

அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.

கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.


பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
 
1. நாடீ சோ’தனா,
2. பவன முக்தாஸனம்
3. ப்ராமரீகும்பகம்
4. யோக நித்ரா
1. நாடீ சோ’தனா,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 11-13 (விரிவாக்கு)
பத்த பத்மாஸனம்

  

பத்மாஸனம்

சித்தாஸனம்

செய்நுட்பம்
  1. பத்த பத்மாஸனம் அல்லது பத்மாஸனம் அல்லது சித்தாஸனத்தில் அமரவும்.
  2. இடது நாசித்துவாரம் வழியாக மெதுவாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
    உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
  3. வலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
  4. சுவாசத்தை வெளியேற்றிய அதே வலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை சுவாசத்தால் நிரப்பவும்.
    உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
  5. இடது நாசித் துவாரத்தால் மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
  6. இதனை 21 முறைகள் செய்யவும்.
2. பவனமுக்தாஸனம்,
யோகாஸனம், மூன்றாம் அத்யாயம், ஸ்லோகங்கள் 4-5 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. தரையில் அமரவும்.
  2. முழங்கால்களை மடக்கி, உயர்த்தி வைக்கவும்.
  3. குதிங்கால்களைப் பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கவும்.
  4. கைகளால் முழங்கால்களைக் கட்டவும்.
  5. முழங்கால்களை மார்பின் மீது அழுத்தவும்.
  6. முதுகு நேராக இருக்கட்டும்.
3. பவன முக்தாஸனத்தில் இருந்தபடியே
ப்ராமரீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
  2. இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.

இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
4. யோக நித்ரா,
யோக தாராவளி, ஸ்லோகங்கள் 25-26 (விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள்.
  2. உடனடியாக அன்-க்ளட்சிங் செய்யுங்கள். அன்-க்ளட்சிங் மற்றும் சோம்பல் தன்மையும் இணைந்த ஒருவித அரைத்தூக்கத்தில் இருக்கும் நிலையே இந்த யோக நித்ரா எனப்படும்.
    (இதனை இரவு தூங்குவதற்கு முன்பு 21 நிமிடங்கள் செய்யவும். இதைச் செய்வதன் மூலம் எளிதாகத் தூக்கத்தில் நுழைய முடியும்.
    யோக நித்ராவைச் செய்து முடித்த பின் உணவு உட்கொண்டுவிட்டு, உறங்கச் செல்லவும்.)
 
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.