குடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க

Care For Irritable Bowel Syndrome

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பு:
 
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
 
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
 
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. சிவ தாண்டவத்தின் முதல் கரணம்
2. பஸ்த்ரிகாகும்பகம்
3. உட்டீயான பந்தம்
4. த்ரிசூ’லகும்பகம்
5. த்ரிநேத்ரகும்பகம்
 1. சிவ தாண்டவத்தின் முதல் கரணம்

செய்நுட்பம்
  1. நேராக நிற்கவும்.
  2. குதிங்கால்கள் ஒன்றையொன்று தொடுமாறும், முன்னங்கால்கள் எதிரெதிர்த் திசைகளை நோக்கி இருக்குமாறும் வைக்கவும்.
  3. முழங்கால்களை மட்டும் அகட்டி வைத்து, உங்களது உடல் எடையைத் தொடைகள் தாங்கும்படி நிற்கவும்.
  4. இடது உள்ளங்கையின் மேல் வலது பின்னங்கையை வைத்துக் கொள்ளவும்.
  5. கைகளை ஆனந்தகந்தத்திற்கு நேரே வைத்துக் கொள்ளவும்-(இதயத்திற்குச் சற்று கீழே மற்றும் தொப்புளுக்குச் சற்று மேலே)
 2. சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165
(விரிவாக்கு)
 
செய்நுட்பம்
  1. கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும்.
  2. நீங்கள் களைப்படையும்வரை செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுக்கவும்.
  3. தாடையை மார்பின் மீது அழுத்திக்கொள்ளவும். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
  4. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
  5. தாடையை தளர்த்திக் கொண்டு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
  6. இதனை 21 முறைகள் செய்யவும்.
 
3. சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருந்தபடியே
உட்டீயான பந்த:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3,ஸ்லோகம் 10
(விரிவாக்கு)
 
செய்நுட்பம்
  1. தொடர்ந்து சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருங்கள். கண்கள் திறந்திருக்கட்டும்.
  2. சுவாசத்தை ஆழமாக உள்ளிழுக்கவும். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்.
  3. வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
  4. அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
  5. முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
  6. இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
  7. அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பு நிலைக்கு மீளவும்.
  8. பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
 4. தரையில் அமர்ந்தபடியே
த்ரிசூ’லகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
(விரிவாக்கு)
 
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  2. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  4. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
  5. இதை 7 முறைகள் செய்யவும்.
 5. தரையில் அமர்ந்தபடியே
த்ரிநேத்ரகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192
(விரிவாக்கு)
 
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  2. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  4. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  5. 5. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  6. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  7. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
  8. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
  9. இதை 7 முறைகள் செய்யவும்.
 

இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.