தூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா

Cure For Long Sight

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 

குறிப்பு:

கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.

அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.

கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
  1. ஸித்தாஸனம்
  2. சீ’தலீகும்பகம்
  3. கூர்மகும்பகம்
  4. ஸமகும்பகம்
1. ஸித்தாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 7 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குதிகாலை வைத்து, பிறப்புறுப்பின் மேல் மறு குதிகாலை வைக்கவும்.
  2. முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
  3. முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
  4. புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
  5. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
2. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
சீ’தலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, அதே ஆஸனத்தில் அமரவும்.
  2. கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
  3. நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
  4. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
  5. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
  6. இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.
 3. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அசையாது அமர்ந்திருங்கள்.
  2. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள். இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள்.
  3. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
  4. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
  5. இதை 7  நிமிடங்கள் செய்யுங்கள்.
4. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
ஸமகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  2. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்தவும்.
  3. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைக் கண்களில் நிறுத்தவும்.
  4. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
  5. இதை 21 முறை செய்யவும்.
 
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.