பெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க

Care For Ulcerative Colitis And Crohn's Disease

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக்கொள்ளக் கூடாது. இந்த நுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பு:
 
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
 
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
 
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. துர்வாஸ ஆஸனம்
2. பஸ்த்ரிகாகும்பகம்
3. திரிசூ’லகும்பகம்
4. த்ரிநேத்ரகும்பகம்

1.  துர்வாஸ ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87 (விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. தரையில் அமர்ந்து கொள்ளவும். 
  2. வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  3. இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும். 
  4. வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும். 
  5. கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும். 
  6. புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
  7. இந்த நிலையிலேயே 30 வினாடிகள் இருக்கவும்.
2. துர்வாஸனத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165
(விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  2. கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யவும், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
  3. உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
  4. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். 
  5. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 
  6. இதனை 21 முறை செய்யவும்.
3. துர்வாஸனத்தில் இருந்தபடியே
த்ரிசூ’லகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
  2. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  4. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  5. இதை 21 முறை செய்யுங்கள்.
 4. துர்வாஸனத்தில் இருந்தபடியே
த்ரிநேத்ரகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
  2. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  4. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  5. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  6. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  7. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
  8. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
  9. இதை 21முறை செய்யுங்கள்.
 
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.