மாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய

Cure For Schizophrenia

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பு:
 
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
 
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
 
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
  1.   குபாணாஸனம்
  2.  வ்யானகும்பகம்
  3.  நாககும்பகம்
  4.  ஸஹிதகும்பகம்
  5.   சூ’ன்யககும்பகம்
  6.  கோசகஆஸனம்
  7.  போரோலிகாகும்பகம்
  8.  கேவலகும்பகம்
1. குபாணாஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 92 (விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. கால்களை நீட்டி அமருங்கள்.
  2. தரையில் அமர்ந்து கொள்ளவும்.
  3. இடது பாதத்தை வலது தொடைப்பகுதி துவங்கும் இடத்தில் இடுப்பு இணைப்பில் வைக்கவும்.
  4. வலது முழங்காலை வளைத்து, வலது பாதத்தை இடது முழங்காலுக்கு அருகில் வைக்கவும்.
  5. இடது முழங்கை வலது முழங்காலுக்கு வெளியில் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  6. இப்போது இடது கையால் வலது பாதத்தைப் பிடித்துக் கொள்ளவும்.
  7. வலது காதில் வலது கை பெருவிரலை வைத்து, மற்ற விரல்களை வெளியே நீட்டியவாறு வைத்துக் கொள்ளவும். (இந்த ஆஸன நிலை உங்கள் மூளை விழிப்படைவதற்கான மின்சுற்றை ஏற்படுத்தும்)
  8. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
 2. குபாணாஸனத்தில் இருந்தபடியே
வ்யானகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 66 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் நிமிர்ந்து உட்காரவும்.
  2. ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  3. சுவாசத்தை உள்ளே நிறுத்தி, உடம்பை முழுவதுமாக இறுக்கவும். அடிவயிறு, தொண்டை, மார்பு, முதுகு என உடல் முழுவதும் இறுகுவதை, தீவிர விழிப்புணர்வு செலுத்தி, அகக்காட்சியில் கொண்டுவரவும்.
  4. சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு தளர்வாகுங்கள்.
  5. இதனை 21 முறை செய்யவும்.

 3. குபாணாஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  2. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  3. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  4. பின் தாடையை நெஞ்சின் மீது வையுங்கள்.
  5. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  6. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  7. இதை 21முறை செய்யுங்கள்.

4. குபாணாஸனத்தில் இருந்தபடியே
ஸஹிதகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 85
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  2. இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  3. உங்களால் முடிந்த அளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  4. மெதுவாக இரண்டு நாசி மற்றும் வாய் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  5. இதை 21 முறை செய்யவும்.
5. குபாணாஸனத்தில் இருந்தபடியே
சூ’ன்யககும்பக:,
ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமருங்கள்.
  2. சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
  3. உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  4. அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யவும்.
  5. உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  6. இதை 21 முறை செய்யவும்.

6. கோசக ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 175-178 (விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. பின்புறமாகப் படுத்துக் கொள்ளவும்.
  2. இரு கைளையும் அகற்றி விரித்துக் கொள்ளவும்.
  3. முழங்கால்களை மடக்கி, தொடைப்பகுதியை மார்பின் மீது வைத்துக் கொள்ளவும்.
  4. கால்களைச் செங்குத்தாக வைக்கவும்.
  5. புருவ மத்தியில் கவனத்தை வைக்கவும்.
  6. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
 7. கோசக ஆஸனத்தில் இருந்தபடியே
போரோலிகாகும்பக:,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமருங்கள்.
  2. ‘ம்ம்ம்’ என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
  3. கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  4. ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  5. இதை 21 முறை செய்யவும்.
 8. கோசக ஆஸனத்தில் இருந்தபடியே
கேவலகும்பக:,
ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 64 (விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமருங்கள்.
  2. சுவாசத்தைக் குறிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  3. உங்களால் முடியாதபோது தளர்வாகவும். மூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும்.
  4. இதை 21 முறை செய்யவும்.

இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.