மூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க

Care For Asthma

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ (Two-way Video conferencing) அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பு:
 
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
 
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
 
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
  1. ஸித்தாஸனம்
  2. நாககும்பகம்
  3. த்ரிநேத்ரகும்பகம்
  4. த்ரிசூ’லகும்பகம்
  5. கூர்மகும்பகம்
  6. ஸமகும்பகம்
1. ஸித்தாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 7 (விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. கால்களை நீட்டி தரையில் அமருங்கள்.
  2. ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைக்கவும்.
  3. இடது உள்ளங்கையின் மீது வலது பின்னங்கையை வைத்து தொடைகளுக்கு இடையில் வைக்கவும்.
  4. முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
  5. முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமருங்கள்.
  6. புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துங்கள்.
  7. இந்நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
 2. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78 (விரிவாக்கு)
 
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமருங்கள்.
  2. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  3. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  4. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  5. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  6. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  7. இதை 21முறை செய்யவும்.

 3. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
த்ரிநேத்ரகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-192
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமருங்கள்.
  2. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  4. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  5. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  6. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  7. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
  8. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  9. இதை 21 முறை செய்யவும்.

4. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
த்ரிசூ’லகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
(விரிவாக்கு)

செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் அமருங்கள்.
  2. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  4. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  5. இதை 21 முறை செய்யவும்.
 5. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
 
செய்நுட்பம்
  1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
  2. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
  3. இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
  4. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
  5. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
  6. இதை 21முறை செய்யவும்.

 6. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே

ஸமகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99
(விரிவாக்கு)
செய்நுட்பம்
  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  2. சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
  3. உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைத் தொப்புளில் நிறுத்துங்கள்.
  4. அவ்வாறு அடக்கும்போது, உடலில் எங்கெங்கு அழுத்தம் இருப்பதாக உணர்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் விழிப்புணர்வைக் கொண்டுவாருங்கள்.
  5. இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
  6. இதை 21 முறை செய்யவும்.

 

இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.