அடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க
Care For Addiction
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. பத்ராஸனம்
2. கேவலீகும்பகம்
3. கபாலபாதி ப்ராணாயாமம்
4. ஜோனீ ஆஸனம்
5. லஹரி ப்ராணாயாமம்
6. ப்ராமரீ கும்பகம்
7. ப்லாவினீகும்பகம்
1. பத்ராஸனம்
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 9-10 (விரிவாக்கு)
அத பத்ராஸனம்
குல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாதோ வ்யுத்க்ரமேண ஸமாஹித: /
பாதாங்குஷ்டௌ கராப்யாஞ்ச த்ரு’த்வா ச ப்ரு’ஷ்ட-தேச’த: // 2-9
ஜாலந்தரம் ஸமாஸாத்ய நாஸாக்ரமவலோகயேத் /
பத்ராஸனம் பவேதேதத் ஸர்வ-வ்யாதி-விநாச’கம் // 2- 10
மொழிபெயர்ப்பு
இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அண்டகோசங்களுக்கு அடியில் வைத்து அமர்ந்து, கைகளை முதுகுப்புறம் குறுக்காக மடித்து, பாதங்களின் விரல்களைப் பிடித்து, மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, ஜாலந்தர முத்ராவைச் செய்யவும். இந்த பத்ராஸனம் அனைத்துவித வியாதிகளையும் போக்குகிறது.

செய்நுட்பம்- (உடலின் பின் பக்கமாக) இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களை நேராக நிமிர்த்தி, அவற்றின் மீது அமரவும்.
- கைகளை முதுகுப்புறம் எடுத்துச் சென்று வலது கையால் இடது பாதத்தின் விரல்களையும், இடது கையால் வலது பாதத்தின் விரல்களையும் சேர்த்துப்பிடிக்கவும்.
- மூக்கு நுனியின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி, தொண்டையைச்சுருக்கி, முகவாய்க் கட்டையை நெஞ்சில் பதிய வைக்கும் ஜாலந்தர முத்ராவைச் செய்யவும்.
- இந்த நிலையிலேயே 30 நொடிகள் இருக்கவும்.
- ஜாலந்தர முத்ராவிலிருந்து விடுபட்டு தளர்வாக அமரவும்.
2. பத்ராஸனத்தில் இருந்தபடியே
கேவலீகும்பக:
அத கேவலீகும்பக:
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே’த் புந: /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு மூச்சை உள்ளிழுக்கும்போதும், அது ‘ஸஹ’ என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் மூச்சை வெளிவிடும்போது, அது ‘ஹம்’ என்ற ஒலியை எழுப்புகிறது.
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ஒவ்வொரு மூச்சை உள்ளிழுக்கும்போதும், ‘ஸம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் மூச்சை உள்ளேயே நிறுத்தவும்.
- மூச்சை உள் நிறுத்தும்போது, ‘ஸோஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
- மூச்சை வெளிவிடும்போது, ‘ஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
3. பத்ராஸனத்தில் இருந்தபடியே
கபாலபாதி ப்ராணாயாமம்
யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100
செய்நுட்பம்- வேக வேகமாக மூச்சை வெளிவிடவும்; மூச்சைவெளிவிடும்போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்
- உடலை தன்னாலேயே மூச்சை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
- இதை 21 முறை செய்யவும்.
4. ஜோனீ ஆஸனம்
அத ஜோனீ ஆஸனம்
தோஉ பகதலீ ஸம்புட கரை ஏடீ மேட்ர கே டிங்க தரே /
அர்த ஹாத கோ அந்தர் ராகை லிலாட பகதல்யா உபர தாகேம் // 215
தஸே ஆங்குரீ அக்ர மிலாவை பணா அக்ர பர லே பஹராவைம் /
கஹுணீ லோம் பூபரி கர தாகை நலீ அர கஹூணீ மிலி டாம் ராகே // 216
ஸம கரி ராகை ஸகல ஸரீர நாஸாத்ரிஷ்டி லகாவே தீர /
முக மாரக ஸோ வாஈ கஹை அஸக்த ஹோய தஹாம் லௌ ரஹே // 217
இடா நாடி கர பவன உதாரே வார ஸாத யா ஜுகதி விசாரை /
சடதௌ சடதௌ கும்பக ஸாதை வார ஸாத யா ஜுகதி அராதை // 218
பந்த ஹோய மலமூத்ர கோ வாயவிக்ரஹை கோய /
யா ஆஸன கை கரதஹீ த்ரவீபூத ஸோ ஹோய // 219
செய்நுட்பம்- கால்களை நீட்டியவாறு தரையில் அமரவும், பின்பு முழங்கால்களைப் பக்கவாட்டில் அகலமாக விரித்துக் கொள்ளவும்.
- இரண்டு குதிங்கால்களை ஒன்று சேர்க்கவும்.
- முன்பக்கமாகக் குனிந்து தலையைக் குதிகாலின் மேல் வைத்துக்கொள்ளவும்.
- இரு கை விரல்களையும் கோர்த்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
5. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
லஹரி ப்ராணாயாமம்
யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100
செய்நுட்பம்- ஒரு நாசி வழியாக சிறு அளவு (Short Inhalation) சுவாசமாக உள்ளிழுக்கவும்.
- பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (Short Exhalation) சுவாசமாக வெளிவிடவும்.
- இதை 21 முறை செய்யவும்.
6. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்ராமரீகும்பக:
அத ப்ராமரீகும்பக:
அர்த-ராத்ரே கதே யோகீ ஜந்தூனாம் ச’ப்த-வர்ஜிதே /
கர்ணௌ பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ரு’ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு’பம் /
ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ’நாதம் தத: பரம் // 5.79
மேக ஜர்ஜர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
துரீ-பேரீ-ம்ரு’தங்காதிநிநாதாநக-துந்துபி:// 5.80||
ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் /
அனாஹதஸ்ய ச’ப்தஸ்ய தஸ்ய ச’ப்தஸ்ய யோ த்வனி: // 5.81
த்வநேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: /
தந்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் /
ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும்.(5.78).
பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஓசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஓசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஓசை போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், ஊதுகொம்பின் ஓசை போன்றும், பறை ஓசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஓசை மற்றும் துந்துபி ஓசை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓசையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஓசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது. அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம்- அதே ஆஸனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும
- இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.
- (இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.)
7. ஜோனீ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்லாவினீகும்பக:
அத ப்லாவினீகும்பக:
யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு’டே /
ஹ்ரு’தி த்ரு’த்வா ஜலே ஸுப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு மூச்சை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்- தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வையுங்கள்.
- முடிந்தளவு நேரம் மூச்சை உள்ளேயே நிறுத்தவும்.
- உங்களால் மூச்சை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுபடுத்தி தளர்வடையுங்கள், பிறகு மூச்சை இருநாசிகளின் வழியாக வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும்.
(இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.)
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.