குண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1Kriya for kundalini awakening Level-----1உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். குண்டலினி சக்தியைப் பற்றிய சத்தியங்கள் ஹட பிரதீபிகா என்ற யோக சாஸ்திர நூல், குண்டலினி சக்தியைப் பற்றியும், அதனை விழிப்பிக்கச் செய்வதில் குருவின் பங்கு பற்றியும், குண்டலினி சக்தி விழிப்படைவதால் விளையும் உயர் நன்மைகளைப் பற்றியும் மிகத்தெளிவாக விளக்குகிறது.
ஸசை’லவன- தாரீணாம் யதா-தாரோsஹி-நாயக: / ஸர்வேஷாம் யோகதந்த்ராணாம் ததா தாரோ ஹி குண்டலீ // 3-1 மொழிபெயர்ப்பு ஆதிசேஷன், தன் தலையால் இந்தப் பூமி, அதிலுள்ள மலைகள், மரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது போல், குண்டலினி சக்தி, அனைத்து யோகப் பயிற்சிகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.
ஸுப்தா குருப்ரஸாதேன யதா ஜாக்ர்தி குண்டலீ / ததா ஸர்வாணி பத்மானி பித்யன்தே க்ரந்தயோsபி ச// 3-2 மொழிபெயர்ப்பு ஆனாலும், தூங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி சக்தி குருவின் கருணையினால் மட்டுமே விழிப்படைகிறது; குருவின் கருணையினால் எல்லா முடிச்சுக்களும் அவிழ்க்கப்பட்டு, அனைத்து தாமரைகளும் (சக்ரங்களும்) மலர்கின்றன. பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படி: மஹாமுத்ரா
மஹாமுத்ராவுக்கும் குண்டலினி சக்திக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைக் கீழ்வரும் ஸ்லோகங்கள் நிரூபிக்கின்றன. மஹாமுத்ரா ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகங்கள்-10-13,15 (விரிவாக்கு)
செய்நுட்பம்
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது. மஹா முத்ராவைப் பயிற்சி செய்வதால் விளையும் உயர் நன்மைகள்: ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகங்கள்-14,16,17 இயம் கலு மஹாமுத்ரா மஹாஸித்தை: ப்ரதர்சி’தா / மஹாக்லேசா’தயோ தோஷா: க்ஷீயந்தே மரணாதய: / மஹாமுத்ராம் ச தேனைவ வதந்தி விபுதோத்தமா: // 3-14 ந ஹி பத்யம்-அபத்யம் வா ரஸா: ஸர்வேsபி நீரஸா: / அபி புக்தம் விஷம் கோரம் பீயூஷமபி ஜீர்யதி // 3.16 க்ஷய-குஷ்ட-குதாவர்த-குலமாஜீர்ண-புரோகமா: / தஸ்ய தோஷா: க்ஷயம் யாந்தி மஹாமுத்ராம் து யோsப்யஸேத் // 3.17 மொழிபெயர்ப்பு துன்பத்தைத் தரும் பஞ்ச கிலேசங்களான ஆசை(இராகம்), குரோதம் (துவேஷம்), அஞ்ஞானம்(அவித்தை), புத்தியே ஆன்மா என்று நினைத்தல்(அஸ்மிதை) பற்று மற்றும் மரணபயம் (அபினிவேசம்) எனப்படும் ஐந்து வித பாவங்களிலிருந்தும் மரணத்திற்கான காரணங்களிலிருந்தும் ஒருவனை இந்த மஹாமுத்ரா விடுவிப்பதால், இதனைச் ‘சிறந்த மனப்பாங்கு’ என்று மேலான ரிஷிகள் விளம்புகின்றனர்.(3.14) மஹா முத்ராவினைப் பயிற்சி செய்யும் ஒருவருக்கு, ‘இது உடல் நலத்துக்கு உகந்தது அன்று’ என்று எந்த ஒரு பொருளும் கிடையாது. அவர் எதையும் உண்ணலாம். மரணத்தை விளைவிக்கக்கூடிய கொடிய விஷம்கூட அவருக்கு ஜீரணமாகிவிடும் அமிர்தத்தைப்போல! (3.16) குஷ்ட ரோகம் போன்ற எல்லா நோய்களும் இந்த மஹா முத்ராவினைப் பயிற்சி செய்வதன் மூலம் அகல்கின்றன.(3.17)
|