by tamilkriyaupdate | Sat, 2014-01-25 13:23
பீனிசம் வராமல் பாதுகாக்கCare For Sinusitis உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- வஜ்ராஸனம்
- ப்ரக்ரு’திகும்பகம்
- அக்னீஷோமாக்யகும்பகம்
- உஜ்ஜாயீகும்பகம்
- கும்பராஜாகும்பகம்
- ஸீத்காரீகும்பகம்
1. வஜ்ராஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12 (விரிவாக்கு) அத வஜ்ராஸனம் ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு’த்வா குதபார்ச்’வே பதாவுபௌ / வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
செய்நுட்பம்- முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
- வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும். 2.வஜ்ராஸனத்தில் இருந்தபடியேப்ரக்ரு’தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70 (விரிவாக்கு)
அத ப்ரக்ரு’தி:கும்பக: வாந்விதேனாசு’கம் கர்ஷந் குர்வந்தூச்சதரம் ஸ்வநம்/ தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு’தி:கும்பக: ஸ்ம்ரு’த: // 70
மொழிபெயர்ப்பு ஒருவ ர், ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம் அதே ஆஸனத்தில் அமரவும்.- ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வையுங்கள்.
- பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறைகள் செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
3.வஜ்ராஸனத்தில் இருந்தபடியே அக்னீஷோமாக்யகும்பக: கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 87 (விரிவாக்கு) அத அக்னீஷோமாக்யகும்பக: ஸூர்யேண பூரயேத் ப்ராணம் கும்பயித்வா யதாவிதி: / ரேசயேத்-அன்யமார்கேண புனஸ்தேன ப்ரபூரயேத் //
யேன த்யஜேத்-தேனாபூர்ய சாக்னி-ஷோமாக்யகும்பக: // 87
மொழிபெயர்ப்பு பிராணன், ஸூர்ய நாடி (வலது நாசி) வழியாக உள்ளிழுக்கப்பட்டு, கூறப்பட்டுள்ள முறையில் அடக்கி, அடுத்த நாசி வழியாக வெளியிடப்பட வேண்டும். இப்போது வெளிவிட்ட நாசி வழியாகவே பிராணன் உள்ளிழுக்கப்பட வேண்டும். இது அக்னீஷோமாக்யகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம் - தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும்.
4.வஜ்ராஸனத்தில் இருந்தபடியே, உஜ்ஜாயீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 131-132 (விரிவாக்கு) அத உஜ்ஜாயீகும்பக: முகம் நியம்ய நாடீப்யாமாக்ரு’ஷ்யாஸும் நியோஜயேத் / குண்டலீ-பார்ச்’வயோ: பச்’சாத் கும்பயேதுதர-ஸ்திதம் //131
ரேசயேதிடயா வாயும் கச்சன்-திஷ்டன்-யதா சரேத் / உஜ்ஜாயீ-கும்பக: ப்ரோக்த: சி’வேநாகில-வேதினா //132
மொழிபெயர்ப்பு வாயை மூடிக்கொண்டு இரு நாசிகள் வழியாகவும், சுவாசத்தை உள்ளிழுத்து நாசியையும் வாயையும் மூடி சுவாசத்தை குண்டலினியுடன் உள்ளேயே வைத்து, சுவாசத்தை இடது நாசி வழியாக வெளிவிடும் இக்கும்பகமே சிவன் விளக்கும் உஜ்ஜாயீ கும்பகமாகும். இது எல்லா நேரமும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- விரல்களால் இரு நாசிகளையும் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள்.
- மெதுவாக இடது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
5.வஜ்ராஸனத்தில் இருந்தபடியேகும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134 (விரிவாக்கு) அத கும்பராஜகும்பக: பலாதாகர்ஷயேத்வாயும் யாவத் க்ராணஸுமுத்ரணம் / கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோsயமீரித: // 134
மொழிபெயர்ப்பு வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம் - தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
- நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
6.வஜ்ராஸனத்தில் இருந்தபடியேஸீத்காரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு) அத ஸீத்காரீகும்பக: ரஸனாமுன்முகீ-க்ரு’த்ய ஸீத்காரம் குர்வதா மருத் / பீயந்தே கும்பகே யஸ்மின் நாஸிகாப்யாம் விரேசனம் // 137
ரஸனாம் ப்ராண-ஸம்யுக்தாம் பீட்யமானாம் விசிந்தயேத் / ஸீத்காரீ -கும்பக: ப்ரோக்த: ஸர்வ-ஸித்திகர: ஸதாம் // 138
மொழிபெயர்ப்பு நாக்கை மேல்நோக்கி மடக்கி, ‘ஸீத்’ என்ற சப்தத்தை எழுப்பியவாறே சுவாசத்தை உள்ளிழுங்கள், சுவாசத்தை உள்ளே நிறுத்தி, பின்பு இரு நாசிகள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். காற்றால் ஏற்பட்ட சப்தத்தின் மீதும், அழுத்தப்பட்ட நாக்கின் மீதும் கவனத்தைக் குவிக்கவும். இதுவே, ஸீத்காரீகும்பகம் எனப்படும். இந்தக்கும்பகம் சாதகருக்கு மிகப்பெரிய ஸித்திகளை அளிக்க வல்லது.
செய்நுட்பம் - தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- நாக்கை மேல்நோக்கித் திருப்பி வைத்துக் கொள்ளவும்.
- ‘ஸீத்’ என்ற சப்தத்துடன் சுவாசத்தை உள்ளே இழுக்கவும். நாக்கின் மீதும், உள்ளே செல்லும் காற்று ஏற்படுத்தும் சப்தத்தின் மீதும் கவனத்தை வைக்கவும்.
- சுவாசத்தை முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை மெதுவாக இரு நாசிகள் வழியாக அழுத்தமாக வெளிவிடுங்கள்
- இதை 21 முறை செய்யுங்கள்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|