தலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய
Cure for Vertigo
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- கோரகஜாலீ ஆஸனம்
- ப்ரக்ரு’திகும்பகம்
- கூர்மகும்பகம்
- ஆரம்பாஸனம்
- கதாகும்பகம்
- வாமாவர்த்த சக்ரகும்பகம்
- தக்ஷிணாவர்த்த ச’ங்ககும்பகம்
1. கோரகஜாலீ ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 85-87 (விரிவாக்கு)
அத கோரகஜாலீ ஆஸனம்
ப்ரதம ஹீ ஊபௌ ஹோய பஹுரி நீசௌ புனி ஹோவை /
தோஉ கர தோஉ ஜங்க மதி நீகீ வித பௌசை //
பஹுரி தோஉ புஜ ஸனை ஜங்க பாஹர லே ஆனை /
நாஸாத்ரிஷ்டி லகாஇ காங்கஸீ நாபி ஜு டானை // 85
பரஸ ஏக லக ஸாதியை பைடிக ஊகடு ஹோய /
ஸனை ஸனை சடதோ கரே கோரகஜாலீ ஸோய // 86
ப்ரஹ்மத்வார குண்டலி தஜை அரூ புனி ஸூதீ ஹோய /
சிமத்கார தனகை மஹீ ஸாதிக தேகே ஸோய // 87
செய்நுட்பம்- குத்துக்காலிட்ட நிலையில் உட்காரவும்.
- இரு கைகளையும் கெண்டைக்கால் தசை மற்றும் தொடைகளுக்கு நடுவில் வைக்கவும்.
- இரு கை விரல்களையும் கோர்த்துக் கொள்ளவும்.
- உள்ளங்கைகளைத் தொப்புள் பகுதி மீது வைத்துக் கொள்ளவும்.
- மூக்கு நுனியைப் பார்த்தவாறே 30 வினாடிகள் இருக்கவும்.
2. கோரகஜாலீ ஆஸனத்தில் இருந்தபடியே
ப்ரக்ரு’தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70 (விரிவாக்கு)
அத ப்ரக்ரு’தி:கும்பக:
வாந்விதேனாசு’கம் கர்ஷந் குர்வந்தூச்சதரம் ஸ்வநம்/
தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு’தி:கும்பக: ஸ்ம்ரு’த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வையுங்கள்.
- பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறைகள் செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
3. கோரகஜாலீ ஆஸனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
அத கூர்மகும்பக:
நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
நேத்ரயோச்’வ ச’ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
- இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
- இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
- இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
- இதை 21முறைகள் செய்யுங்கள்.
4. கானி பாவ ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 94 (விரிவாக்கு)
அத கானி பாவ-ஆஸனம்
ஆஸண கௌ குண ஆஷி துஷதா ஹோஇ தோ ஆசீ ஹௌஈ // 94
(இந்த ஆஸனத்தை யோகாவில் நன்கு தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே செய்யமுடியும். ஆகவே ஆரம்பநிலை பயிற்சியாளர்கள் இரண்டாவது புகைப்படத்தில் உள்ளபடி அர்த கானி பாவ ஆஸனத்தைச் செய்தால் போதுமானது.)
செய்நுட்பம்
- குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில், இரண்டு கைகளையும் (சௌகர்யமான நிலையில்) தரையில் ஊன்றிக் கொள்ளவும். முழங்கைகளை வளைக்கவும்.
- கால்களைத் தரையிலிருந்து உயர்த்தி, முழங்கால்களை முழங்கைகளைத் தொட்டவாறு வைக்கவும்.
- முழு உடலையும் இரு உள்ளங்கைகளால் சமமாகத் தாங்கிக் கொள்ளவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
5. கானி பாவ ஆஸனத்தில் இருந்தபடியே
கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112 (விரிவாக்கு)
அத கதாகும்பக:
உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்ப: சி’வேனோக்தோ யோகீனோ பலகாரக: // 112
மொழிபெயர்ப்பு
இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.
செய்நுட்பம்
- இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
6. கானி பாவ ஆஸனத்தில் இருந்தபடியே
வாமாவர்த்த சக்ர கும்பக,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 106-108 (விரிவாக்கு)
அத வாமாவர்த்த சக்ரகும்பக:
தக்ஷவாமா-வர்த்த-பேதாச்-சக்ர-ச’ங்கௌ த்விதோதிதௌ // 106
ஸூர்யேணாபூர்ய மருதம் கும்பயேதுதரஸ்திதம் /
ரேசயேதிந்துனா பூயஸ்-ததா தகே்ஷண பூரயேத் // 107
கும்பயேதிடயா ரிச்யாத்தக்ஷிணாவர்த்த-சக்ரக: /
விலோமோsயம் சக்ர-கும்போ வாமாவர்த்த: சி’வோதித: // 108
மொழிபெயர்ப்பு
இடது மற்றும் வலது என்ற வித்தியாசத்தைக் கொண்டு சங்க மற்றும் சக்ர என்று கும்பகங்கள் இரண்டு வகைப்படும்.
சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும். பின்பு மீண்டும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுத்து வயிற்றை காற்றால் நிரப்பிக் கொள்ளவும். பின்பு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும். இது தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம். இதன் எதிர்ப்புறச் சுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம் என்று சிவன் அருளுகிறார்.
செய்நுட்பம்
- ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுக்கவும்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடவும்.
- மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுக்கவும்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக வலது நாசி வழியாக வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
7. கானி பாவ ஆஸனத்தில் இருந்தபடியே
தக்ஷிணாவர்த்த ச’ங்ககும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110 (விரிவாக்கு)
அத தக்ஷிணாவர்த்த ச’ங்ககும்பக:
சக்ரகும்பம் த்விதா குர்யாதக்னிஷோமம் ததைகதா /
ச’ங்ககும்போsயமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு’த: // 110
மொழிபெயர்ப்பு
சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககும்பகம் எனப்படுகிறது. சங்ககும்பகமும் இதற்குமுன் சொல்லப்பட்ட சக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
- ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுக்கவும்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடவும்.
- மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுக்கவும்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்தவும்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடவும். (1-6 எண் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யவும். இத்துடன் இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்னீஷோமாக்யகும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யவும்.)
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடவும்.
- இந்த மொத்த சுற்றை அதாவது இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீஷோமாக்யகும்பகச் சுற்றை 21 முறைகள் செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.