குண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2

Kriya for kundalini awakening Level-----2

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பு:
 
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
 
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
 
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
மஹாமுத்ராவுடன் கேச’ரீ முத்ரா, சா’ம்பவீ முத்ரா, மூலபந்தம்
 
1. மஹாமுத்ரா
ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகங்கள்-10-13,15
(விரிவாக்கு)

2. கேச’ரீ முத்ரா
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 3, ஸ்லோகம் 31
(விரிவாக்கு)

3. சா’ம்பவீ முத்ரா
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 3, ஸ்லோகம் 31
(விரிவாக்கு)

4.மூலபந்த:
ஹட ப்ரதீபிகா, அத்யாயம்-3, ஸ்லோகம்-61
(விரிவாக்கு)


செய்நுட்பம்
 1. கால்களை நேராக நீட்டி அமருங்கள்.
 2. இடது காலை மடக்கி, குதிகாலை ஆஸனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கவும்,
 3. சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றுங்கள். கீழ் வயிற்றுப்பகுதியை உட்பக்கமாக சுருக்குங்கள். முன்புறமாகக் குனிந்து, நீட்டப்பட்டிருக்கும் வலது பாதத் இரண்டு கைகளாலும் உறுதியாகப் பிடிக்கவும்.
 4. சுவாசத்தை வெளியேயே நிறுத்தி, தலையை நேராக நிமிர்த்தி, கண்களை மூடுங்கள்.
 5. முதுகெலும்பு வளையாது நிமிர்ந்திருக்கட்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் தளர்வாக அமருங்கள்.
 6. இப்போது கேசரீ முத்ராவைக் கடைபிடிக்கவும். (அதாவது நாக்கை உட்புறமாக மடித்து, மேலன்னத்தை தொடுமாறு வைத்து, கண்களைத் திறக்காமலேயே, கண்களின் உட்புறமாகவே, கருவிழிகள் இரண்டையும் புருவமத்தியை நோக்கித் திருப்புங்கள்.)
 7. இனியும் சுவாசத்தை வெளியே நிறுத்தமுடியாது எனும்போது,மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே தலையைச் சிறிது பின்புறமாகச் சாய்த்து, கண்களைத் திறந்து, இமைகளைச் சிமிட்டாமல் பார்வையை நிலையாக ஓரிடத்தில் நிறுத்துங்கள். (இதுவே சாம்பவீ முத்ரா.)
 8. மொத்த விழிப்புணர்வையும் உள்முகப்படுத்தவும். முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
 9. சுவாசத்தை உள்ளே நிறுத்தும்போது, மூலபந்தாவைக் கடைபிடிக்கவும். அதாவது குதிகாலை ஆஸனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தி, அடிவயிற்றுப் பகுதியை உட்பக்கமாக இழுத்துச் சுருக்கவும்.
 10. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, பார்வையைத் தளர்த்தி, மூலபந்தாவை விடுவிக்கவும். தலையை நிமிர்த்தவும். பிறகு மிக மிக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
 11. இது ஒரு சுற்று. இந்தச் சுற்றை 3 முறை செய்யவும்.
 12. இடது குதிகாலை வைத்துச் செய்ததுபோல், வலது காலை மடித்தும் 3 முறை செய்யவும்.
 13. பிறகு இரண்டு கால்களையும் நீட்டி 3 முறை செய்யவும்.

  (குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே நீங்கள் இந்தச் சுற்றுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். சொல்லப்போனால், குண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் இந்த க்ரியாக்களை குருநாதரிடம் தீகை்ஷபெற்ற பின்பு செய்வதுதான் சாலச் சிறந்தது.)
 
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.