மதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க

Care For Autism

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பு:
 
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
 
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
 
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
 1.  பிசி’ஷ்டாஸனம்
 2.  அந்த:கும்பகம்
 3.  பஹி:கும்பகம்
 4.  போதசோ’காஸனம்
 5.  ப்ரக்ரு’திகும்பகம்
 6.  நாககும்பகம்
 7.  கூர்மகும்பகம்
1. பிசி’ஷ்ட ஆஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா-உபதேஸம் 2,ஸ்லோகங்கள் 22- 23 (விரிவாக்கு)

செய்நுட்பம்
 1. கால்களை முன்னோக்கி நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள். 
 2. இரண்டு கால்களை ஒன்றாக மடித்து, இரண்டு பாதங்களையும் ஒன்றாக அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
 3. கால்களுக்கு இடையில் கைகளை நுழைத்து கால்களை மேல்நோக்கி உயர்த்துங்கள். 
 4. முகத்திற்கு நேராகப் பாதங்களை எடுத்து வாருங்கள். 
 5. கை விரல்களை ஒன்றாகக் கோர்த்து, உள்ளங்கைகளை நெற்றியின்மீது வைத்துக்கொள்ளுங்கள். 
 6. பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள். 
 7. இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
 2. பிசி’ஷ்டாஸனத்தில் இருந்தபடியே
அந்த:கும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 28
(விரிவாக்கு)
செய்நுட்பம்
 1. தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
 2. எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்க்ளட்ச் செய்தவாறே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். 
 3. சுவாசத்தை வெளிவிட்டுத் தளர்த்திக் கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாக சுவாசிக்கவும்.
 4. இதனை 21 முறை செய்யவும்.
3. பிசி’ஷ்டாஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31 (விரிவாக்கு)
செய்நுட்பம்
 1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
 2. மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள். 
 3. எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள். 
 4. பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
 5. இதை 21 முறை செய்யவும்.
4. போதஸோக ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 220-222 (விரிவாக்கு)

செய்நுட்பம்
 1. தரையில் குத்துக்காலிட்டு அமருங்கள். 
 2. முட்டிகளை நெஞ்சுப்பகுதிக்கு அருகில் இருக்குமாறு பிடியுங்கள். 
 3. கைகளைக் குறுக்காக வைத்து, வலது கையால் இடது முட்டியையும், இடது கையால் வலது முட்டியையும் பிடியுங்கள். 
 4. தாடையை முட்டிகளின்மீது வைக்கவும். 
 5. பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
 6. இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
5.போதசோ’கா ஆஸனத்தில் இருந்தபடியே
ப்ரக்ரு’தி:கும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 70 (விரிவாக்கு)
செய்நுட்பம்
 1. ‘வா’ எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள். 
 2. முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். 
 3. பிறகு மெதுவாகச் சாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள். 
 4. இதை 21முறை செய்யவும். குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
6. போதசோ’காஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 77&78 (விரிவாக்கு)
செய்நுட்பம்
 1. அதே ஆஸனத்தில் அமருங்கள். 
 2. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள். 
 3. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள். 
 4. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும். 
 5. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
 6. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
 7. இதனை 21 முறை செய்யவும்.
7. போதசோ’காஸனத்தில் இருந்தபடியே
கூர்மகும்பக:, 
கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
செய்நுட்பம்
 1. அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
 2. உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
 3. இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
 4. இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும். 
 5. இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
 6. இதை 21முறை செய்யுங்கள்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.