தாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய
Cure for low Self esteem
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- அர்த பத்மாஸனம்
- ஜாலந்தர பந்தம்
- பாவனை
1. அர்த பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33 (விரிவாக்கு)
அத அர்த பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ’ // 31
த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச’னை: // 32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (32)
பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (33)

செய்நுட்பம்- வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைக்கவும்.
- இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடையின் கீழ் வைக்கவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
2. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஜாலந்தரபந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12 (விரிவாக்கு)
அத ஜாலந்தரபந்த::
கண்ட-ஸங்கோசனம் க்ரு’த்வா சிபுகம் ஹ்ரு’தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு’தே பந்தே ஷோடச’ாதார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும்.
- தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
- மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள்.
- இதை 21முறைகள் செய்யுங்கள்.
3. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே
பாவனை
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதைவிட 5 மடங்கு பெரிதாக இருப்பதாக உங்களை பாவனை செய்யுங்கள்.
- இப்பொழுது நீங்கள் 20 அடி உயரம் உள்ளவராக உணருங்கள்.
- உங்களை ஒரு பெரிய பாறையாக, ஒரு பெரிய உயிரினமாக பாவனை செய்யுங்கள்.
இதே பாவனையுடன் அடுத்த சில நிமிடங்கள் அமர்ந்திருக்கவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.