by tamilkriyaupdate | Wed, 2014-01-22 09:43
நுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்கCare for Pulmonary உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்மாஸனம்
- லஹரி ப்ராணாயாமம்
- கபாலபாதி ப்ராணாயாமம்
- சூ’ன்யககும்பகம்
- கேவலீகும்பகம்
- வாமகதிகும்பகம்
1. பத்மாஸனம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33 (விரிவாக்கு) அத பத்மாஸனம் உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: / உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ’ // 2.31
த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா / உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச’னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் / துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)
செய்நுட்பம்- வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
- இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
- வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
- முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும். கைகளைத் தளர்வாக வைக்கவும்.
2.பத்மாஸனத்தில் இருந்தபடியேலஹரி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100 அத சீ’தலீகும்பக: ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம் - 1. ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுக்கவும்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடவும்.
- இதை 5 நிமிடங்கள் செய்யுங்கள்.
3.பத்மாஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100 அத ஸீத்காரீ ப்ராணாயாமம்: ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம் - வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடவும்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
- உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
4.பத்மாஸனத்தில் இருந்தபடியேசூ’ன்யககும்பக:, ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள் அத பவனமுக்தாஸனம் த்வயோஸ்து பாதயோ: பார்ஷ்ணி லாத்வாஸ்வஸ்வநிதம்பகே / ஜானுனீ வக்ஷஸி ஸாதுர்பத்னாதி கரபந்தனை: // 4
ஏவம்-வித-ஸ்திதிர்யத்ர தத்ர வாயுமுக்தாஸனம் / பவேதனேன வசா’சு’த்திர்மலஸ்தவாயோர்மோசனம் // 5
மொழிபெயர்ப்பு இரண்டு குதிங்கால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அமர்ந்து, இரு கைகளையும் கோர்த்து முழங்கால்களை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(4)
இந்த ஆசனம் பவன (வாயு) முக்தாஸனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், பெருங்குடல் காற்று வெளியேற்றப்பட்டு அடிவயிறு தூய்மையடைகிறது (5).
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடவும்.உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.
- அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும்.
- இதை 21 முறை செய்யவும்.
5.பத்மாஸனத்தில் இருந்தபடியே,கேவலீகும்பக: அத கேவலீகும்பக: ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே’த் புந: /
மொழிபெயர்ப்பு ஒவ்வொரு மூச்சை உள்ளிழுக்கும்போதும், அது ‘ஸஹ’ என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் மூச்சை வெளிவிடும்போது, அது ‘ஹம்’ என்ற ஒலியை எழுப்புகிறது. செய்நுட்பம் 1. அதே ஆஸனத்தில் அமரவும். 2. ஒவ்வொரு மூச்சை உள்ளிழுக்கும்போதும், ‘ஸம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 3. உங்களால் இயன்ற அளவு நேரம் மூச்சை உள்ளேயே நிறுத்தவும். 4. மூச்சை உள் நிறுத்தும்போது, ‘ஸோஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள். 5. மூச்சை வெளிவிடும்போது, ‘ஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 6 இதை 21 முறை செய்யவும். 6.பத்மாஸனத்தில் இருந்தபடியே வாமகதிகும்பக:, ஹட ஸங்கேத சந்த்ரிகா, 10வது அத்யாயம், 28வது வரி:, ஸ்லோகம் 193 அத த்ரிசூ’லகும்பக: கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193
மொழிபெயர்ப்பு எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம் - இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்
- சரியான முறையில் சுவாசத்தை நிறுத்தவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|