by tamilkriyaupdate | Wed, 2014-01-22 12:35
நுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடையCure for Pulmonary உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்ராஸனம்
- ப்லாவினீகும்பகம்
- கமலகும்பகம்
- குமுதகும்பகம்
- க்ரமநேத்ரகும்பகம்
- த்ரிநேத்ரகும்பகம்
1. பத்ராஸனம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகம் 37 (விரிவாக்கு) அத பத்ராஸனம் குல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்’வயோ: க்ஷிபேத் / பார்ச்’வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு’டம் பத்த்வா து நிச்’சலம் // 37
மொழிபெயர்ப்பு பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.
 செய்நுட்பம்- தரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
- பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
- இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.
- இந்த நிலையிலேயே 30 வினாடிகள் இருக்கவும். 2.பத்ராஸனத்தில் இருந்தபடியேப்லாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171 (விரிவாக்கு)
அத ப்லாவினீகும்பக: யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு’டே / ஹ்ரு’தி த்ரு’த்வா ஜலே ஸுப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம் - தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வையுங்கள்.
- முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுபடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும். 3.பத்ராஸனத்தில் இருந்தபடியே கமலகும்பக: கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 189 (விரிவாக்கு)
அத கமலகும்பக: பூரயேதர்கனாட்யாஸு கும்பயித்வா யதாவிதி / ரேசயேச்சேந்துநாட்யாஸுகும்பக: கமலாபித: // 189
மொழிபெயர்ப்பு வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுத்து, சுவாசத்தைச் சரியாக உள்ளே நிறுத்தி, இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றும் முறை கமலகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம் - வலது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை அங்கேயே நிறுத்துங்கள்.
- இடது நாசித்துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யவும்.
4.பத்ராஸனத்தில் இருந்தபடியேகுமுதகும்பக:,கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190 (விரிவாக்கு) அத குமுதகும்பக: பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே / ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு’த: // 190
மொழிபெயர்ப்பு இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, உள்ளே நிறுத்தவும்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
5.பத்ராஸனத்தில் இருந்தபடியே,க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191 (விரிவாக்கு) அத க்ரமநேத்ரகும்பக: ஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடவும்
- சுவாசத்தை வெளியே நிறுத்தவும்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
6.பத்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு) அத த்ரிநேத்ரகும்பக: ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|