ஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா
Care for Migraine
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக்கொள்ளக் கூடாது. இந்த நுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. க்ரு’த்ராஸனம்
2. கும்பராஜாகும்பகம்
3. சீ’தலீகும்பகம்
4. ஸீத்காரீ ப்ராணாயாமம்
1. க்ரு’த்ராஸனம்,
அத க்ரு’த்ராஸனம்
ஏதஸ்யாங்குஷ்டயோர்மூலே கர்பூரே ஸந்நிவேச’யேத் /
பரிவர்த்த்ய கரௌ ஸ்ப்ரு’ஷ்ட வாவங்குலீதல-கோபிதா // 25
அங்குலீப்ரு’ஷ்டயோஹேது சிபுகம் ஸந்நிதாபயேத் /
அங்குஷ்டௌ ஸரலோ க்ரு’த்வா தாலுமூல-ஸமாச்’ரிதௌ // 26
த்ரு’த்வா ஸ்திரமனா பூத்வா க்ரு’த்ராஸனமிதம் பரம் /
ஸர்வதோஷக்ஷயகரம் ஸர்வோபத்ரவ-நாச’னம் // 27 12
மொழிபெயர்ப்புபத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டு, முழங்கைகளைப் பாதங்களில் வைத்துக்கொண்டு, விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்து, உங்கள் தாடையை விரல்மூட்டுக்களின் மேல் வைக்கவும். பெருவிரல் தொண்டையை அழுத்தியவாறு இருக்கட்டும். இது எல்லாவித நேய்களையும், அதனால் உண்டாகும் பிரச்சினைகளையும் போக்குகிறது.

செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- இரு முழங்கைகளையும் அததற்குரிய பாதங்களில் வைக்கவும்.
- விரல்களை ஒன்றோடு ஒன்றாகக் கோர்த்துக் கொள்ளவும்.
- தாடையை விரல் மூட்டுக்களின் மேல் வைத்துக் கொள்ளவும்.
- தொண்டைப் பகுதியை பெருவிரல்களால் அழுத்திக் கொள்ளவும்.
- இதே நிலையில் 60 வினாடிகள் அமர்ந்திருக்கவும்.
2. க்ரு’த்ராஸனத்தில் இருந்தபடியே
கும்பராஜகும்பக:,
அத கும்பராஜகும்பக:
பலாதாகர்ஷயேத்வாயும் யாவத் க்ராணஸுமுத்ரணம் /
கும்பயேச்ச ததா வாயும் கும்பராஜோண்யமீரித: // 134
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது ‘ஸஹ’ என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது ‘ஹம்’ என்ற ஒலி எழுப்புகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
- நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்தவும்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடவும்.
- இதனை 21 முறைகள் செய்யவும்.
3. க்ரு’த்ராஸனத்தில் இருந்தபடியே
சீ’தலீகும்பக:,
அத சீ’தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, மூச்சை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- மூச்சை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறைகள் செய்யவும்.
(மூச்சை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.)
4. க்ரு’த்ராஸனத்தில் இருந்தபடியே
ஸீத்காரீ ப்ராணாயாமம்,
அத ஸீத்காரீ ப்ராணாயாமம்:
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.