தைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க
Care For Thyroid Problems
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- போத்யாஸனம்
- ஜாலந்தர பந்தம்
- த்ரிசூ’லகும்பகம்
- நாககும்பகம்
- த்ரிநேத்ரகும்பகம்
அத போத்யாஸனம்
தோஊ ஹாத பக பாஹர ஆனை கோடாதரை காகஸீ டானை /
அங்குஷ்ட பிங்டலீ லகதா தரை சரண உபை ஆகாஸதிஸீ கரே /
பிஷ்டிரூ கூலா தரதீ லாவை உதரஸங்கோச ஊர்த டஹராவை /
கோடா ஸீஸபி தம்பன கரை இஹ விதி போத்யாஸன தரை // 123
தேஹ விஸாலீ நாரஹை ரக்தபித்தி புனி ஜாய /
புந்நஸீ கும்மரி ஆதி ஜௌ நாநா ரோக நஸாய // 124
- தரையில் கால்களை நீட்டி அமருங்கள்.
- கெண்டைக்கால் பகுதியைக் கைகளால் பிடித்து, தலையை நோக்கி கால்களை உயர்த்துங்கள்.
- கால்களை மடக்கக்கூடாது.
- வயிற்றுப் பகுதியைச் சுருக்குங்கள்.
- தலையை முட்டியின்மீது வையுங்கள்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
(இந்த ஆஸனத்தை 3-வது படத்தில் உள்ளதுபோன்றும் செய்யலாம்.)
2.போத்யாஸனத்தில் இருந்தபடியேஜாலந்தரபந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12 (விரிவாக்கு)
அத ஜாலந்தரபந்த::
கண்ட-ஸங்கோசனம் க்ரு’த்வா சிபுகம் ஹ்ரு’தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு’தே பந்தே ஷோடச’ாதார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு
தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும்.
- தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
- மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள்.
- இதை 21முறைகள் செய்யுங்கள்.
3. போத்யாஸனத்தில் இருந்தபடியே
த்ரிசூ’லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)
அத த்ரிசூ’லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
4.போத்யாஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78 (விரிவாக்கு)அத நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோகயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு’டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி’வோதித: /
க்ஷுதாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள். பின் தாடையை நெஞ்சின் மீது வையுங்கள்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
5. போத்யாஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.