தோல் பிரச்சினைகள் வராமல் காக்க
Care For Skin Problems
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- மாகடாஸனம்
- சா’ந்தகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- பஸ்த்ரிகாகும்பகம்
- த்ரிநேத்ரகும்பகம்
- த்ரிசூ’லகும்பகம்
1.மாகட ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 125- 127 (விரிவாக்கு)
அத மாகட ஆஸனம்
தோஊ பகதலீ ஸம்பூட ஆனே தினகீ பிஷ்டி பூமிபரி டானை /
மூலத்வார ஏடயாம்பரி ல்யாவே மூட ஹாத உசா டஹராவை // 125
தோஊ கரகீ அங்குரீ ஜோஊ வதகம் ஆனி லகாவை ஸோஊ /
காஜி குஜாவன் கீ ஜ்யூம் கரை த்ரிகுடீ த்ரிஷ்டி அசல கரி தரை // 126
தரனஸு கபஹு நா சிகை அக்னிவ்ரு’த்தி அதி ஹோய /
வேக தமை அரூ உதரஸுத மாகட கே குன ஸோய // 127

செய்நுட்பம்- முட்டிக்கால் போடவும்.
- பாதங்களைச் சேர்த்து வைத்து,குதிங்கால்களில் ப்ருஷ்டங்கள்படுமாறு அமர்ந்து, பிறகு முழங்கால்களைச் சற்று அகட்டி வைக்கவும்.
- கைகளைத் தூக்கி, குறுக்காக மடித்து தலைக்குப் பின்புறமாக வைக்கவும்.
- உங்கள் பார்வையைப் புருவ மத்தியில் வைக்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
2.மாகட ஆஸனத்தில் இருந்தபடியேசா’ந்தகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 90 (விரிவாக்கு)
அத சா’ந்தகும்பக:
காயஸ்யாந்தர்-பஹிர் வ்யாப்தி: சா’ந்த கும்பக உதாஹ்ரு’த: /
ஸ்தானயோரந்தரே ருத்வா கும்பயேத்யாதி மாருதம் // 90
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளே நிறுத்திக்கொண்டு, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மூச்சு இருப்பதாக பாவனை செய்தலே சாந்த கும்பகமாகும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை ஆழமாக உள்ளிழுக்கவும்.
- முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- உள்ளே நிறுத்தும்போது, உடம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் சுவாசம் இருப்பதாக பாவனை செய்யவும்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு உள்ளே நிறுத்த முடியாதபோது, இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வெளியேற்றி தளர்வுநிலைக்கு வரவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
3. மாகட ஆஸனத்தில் இருந்தபடியே
ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு)
அத ஸீத்காரீ ப்ராணாயாமம்:
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
4.மாகட ஆஸனத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:,கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77 (விரிவாக்கு)
அத பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் /
ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 75
ஏவம் விம்ச’திவாரம் ச க்ரு’த்வா குர்யாச்சகும்பகம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: /
ந ச ரோகோ ந ச க்லேச’ ஆரோக்யம் ச தினே தினே // 77
மொழிபெயர்ப்பு
கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (75)
இவ்வாறு 20 முறை செய்யவும். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (76-77)
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
- சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யவும்.
- 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும். சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும்.(2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
- இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யவும்.
-
5. மாகட ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு)
அத த்ரிநேத்ரகும்பக:
ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
6.மாகட ஆஸனத்தில் இருந்தபடியே
த்ரிசூ’லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு)
அத த்ரிசூ’லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.