by tamilkriyaupdate | Tue, 2014-01-21 21:04
நீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்கCare for Diabetes உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- அனீலாஸனம்
- உட்டீயான பந்தம்
- பஸ்த்ரிகாகும்பகம்
- மூர்ச்சனாகும்பகம்
- ப்ராமரீகும்பகம்
அத அனீலாஸனம் தோஉ ஹாத பூமபர டானோ கஹூணீ ஜாடி நாபிலக ஆனை / பணா தோஉ ஐஸை விதி கரை பிஷ்டி ஹதேல்யாகீ பரி தரை // 346
ஐஸை ரஹை கராகை பாணி த்ரிஷ்டி தரை நாஸாமத்ய ஆணி / யாஸௌ தபத மிடே தன கேரீ ஜைதராம ப்ரகட கஹை டேரீ // 347
 செய்நுட்பம்- குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளவும்.
- உள்ளங்கைளைத் தரையில் படுமாறு வைத்து, கைகளைப் பாதத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும்.
- கைகளை நேராக வைத்து முழங்கைகளைத் தொப்புள் பகுதியில் சேர்த்து வைத்துக் கொள்ளவும். (உங்களால் குத்துக்காலிட்டு உட்கார முடியாவிட்டால் தரையில் அமர்ந்து கொள்ளலாம்.)
- மூக்கின் நுனிப்பகுதியைப் பார்க்கவும்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
2.அனீலாஸனத்தில் இருந்தபடியேஉட்டீயான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10 (விரிவாக்கு) அத உட்டீயான பந்த: உதரே பச்’சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் / உட்டானம் குருதே யஸ்மாதவிச்’ராந்தம் மஹாகக: / உட்டீயானம் த்வஸௌ பந்தோ ம்ரு’த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)
மொழிபெயர்ப்பு தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுக்கவும். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டீயான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.கண்கள் திறந்திருக்கட்டும்.
- சுவாசத்தை ஆழமாக உள்ளிழுக்கவும். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
- வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
- அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
- முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும். இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
- அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
- பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
3.அனீலாஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும்பக:,கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77 (விரிவாக்கு) அத பஸ்த்ரிகாகும்பக: பஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா-க்ரமேண ஸம்ப்ரமேத் / ததா வாயும் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 75
ஏவம் விம்ச’திவாரம் ச க்ரு’த்வா குர்யாச்சகும்பகம் / ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 76
த்ரிவாரம் ஸாதயேதேனம் பஸ்த்ரிகா-கும்பகம் ஸுதீ: / ந ச ரோகோ ந ச க்லேச’ ஆரோக்யம் ச தினே தினே // 77
மொழிபெயர்ப்பு கொல் லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (75)
இவ்வாறு 20 முறை செய்யவும். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (76-77)
செய்நுட்பம் - தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
- சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யவும்.
- 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும். சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்தவும். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும்.(2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)
- இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யவும்.
4.அனீலாஸனத்தில் இருந்தபடியே மூர்ச்சாகும்பக:,ஹடப்ரதீபிகா, அத்யாயம் 4, ஸ்லோகம் 60 (விரிவாக்கு) அத மூர்ச்சாகும்பக: பூரகாந்தே காடதரம் பத்த்வா ஜாலந்தரம் ச’னை: / ரேசயேன்-மூர்ச்சாக்யேயம் மனோ-மூர்ச்சா ஸுக-ப்ரதா // 4-60
மொழிபெயர்ப்பு சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்த பின்பு ஜாலந்தர பந்தாவில் நிலைநிறுத்தவும். பின்பு மெதுவாக சுவாசத்தை ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே வெளிவிடவும். மயக்கம் அல்லது மூர்ச்சை ப்ராணாயாமம் என்றழைக்கப்படும் இப்பிராணாயாமம் மனத்தை நிறுத்திவிடுவதால் ஆனந்தத்தை அளிக்கிறது.
செய்நுட்பம் - அதே நிலையில் இருக்கவும்.
- உள்ளங்கைகளை முழங்காலின் மேல் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளவும்.
- இரண்டு நாசிகள் வழியாக சுவாசத்தை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளிழுக்கவும். தாடையை மார்பின் மேல் வைத்துத் தொண்டைப் பகுதியில் இறுக்கம் உருவாகுமாறு ஜாலந்தர பந்தாவைச் செய்யவும்.
- முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
5. அனீலாஸனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82 (விரிவாக்கு) அத ப்ராமரீகும்பக: அர்த-ராத்ரே கதே யோகீ ஜந்தூனாம் ச’ப்த-வர்ஜிதே / கர்ணௌ பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78
ச்ரு’ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு’பம் / ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ’நாதம் தத: பரம் // 5.79
மேக ஜர்ஜர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் / துரீ-பேரீ-ம்ரு’தங்காதிநிநாதாநக-துந்துபி:// 5.80
ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் / அனாஹதஸ்ய ச’ப்தஸ்ய தஸ்ய ச’ப்தஸ்ய யோ த்வனி: // 5.81
த்வநேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: / தந்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் / ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82
மொழிபெயர்ப்பு ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும்.(5.78)
பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஓசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஓசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஓசை போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், ஊதுகொம்பின் ஓசை போன்றும், பறை ஓசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஓசை மற்றும் துந்துபி ஓசை போன்றும் கேட்கிறார். (5.79-80)
ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓசையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஓசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)
மனம் கரைந்துவிடும்போது. அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
- இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும். இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|