மனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா

Care For Depression

 
உரிமை மறுப்பு (Disclaimer)
 
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
 
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
 
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
குறிப்பு:
 
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
 
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
 
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படி
 1. ப்ராண முத்ரா

செய்நுட்பம்

 1. வலது காலை மடித்து இடது தொடையின் மீதும், இடது காலை மடித்து வலது தொடையின் மீதும் வைத்து பத்மாஸனத்தில் அமருங்கள்.
 2. கண்களை மூடி, முழு கவனத்தையும் உங்கள் மூச்சின்மீது செலுத்துங்கள்.
 3. கைகளைத் தொடையில் வைத்துக் கொள்ளவும்.
 4. மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்களின் நுனிப்பகுதியைப் பெருவிரலால் தொடவும்.சுட்டு விரலும் நடு விரலும் நேராகவும் ஒட்டியும் இருக்க வேண்டும். 
 5. உடல் முழுவதும் சக்தி பாய்வதாக பாவனை செய்யவும்.
 6. இதே நிலையில் 3 நிமிடங்கள் இருக்கவும்.
 
நிலை : 1
 1. கண்களை மூடுங்கள். எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக சுவாசத்தை உள்ளிழுத்துவெளிவிடுங்கள்.
 2. இதை 3 முறை செய்யவும்.
 நிலை : 2
 1. பயிற்சியாளர் தனது இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுப்புக்கும் இடையில் உறுதியாக வைத்து அதன்மீது அமர்ந்துகொள்ள வேண்டும்.
 2. பிறகு வயிற்றுத்தசைப்பகுதியை இறுக்கமாக்கி நுரையீரல் பகுதியிலிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியேற்றி, உங்களால் எவ்வளவு நேரம் வெளியே நிறுத்த முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
 3. சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,மூலாதார சக்ரத்தில் முழுக் கவனத்தையும் வைக்கவும்.
  பிறகு ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
 4. இதை 11 முறை செய்யவும். இந்த முத்ரா மனச்சோர்வினைத் தவிர்க்கிறது.
நிலை : 3
 1. மூலபந்த முத்ராவை விடுவிக்கவும். (இடது குதிகாலை எடுத்துவிடலாம்.)
 2. சுவாசத்தை மிக மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றுப் பகுதியை முழுவதுமாக விரிவாக்கி, வயிற்றையும் நுரையீரலையும் முடிந்தளவு காற்றால் நிரப்பவும்.
 3. உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு சுவாசத்தை மெதுவாக  வெளிவிடுங்கள்.
 4. இதை 11 முறை செய்யவும்.
நிலை : 4
இரண்டாவது, மூன்றாவது நிலைகளை இணைத்துச் செய்யவும்.
 1. வயிற்றுத்தசைப்பகுதியை இறுக்கமாக்கவும்.
 2. நுரையீரல் பகுதியிலிருக்கும் காற்றை முழுவதுமாக வெளிவிடுங்கள்.
 3. உங்களால் எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
 4. பிறகு சுவாசத்தை மிக மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றுப் பகுதியை முழுவதுமாக விரிவாக்கி, வயிற்றையும் நுரையீரலையும் முடிந்தளவு காற்றால் நிரப்பவும்.
 5. உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
 6. பிறகு சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
 7. இதை 21 முறை செய்யவும்.

 

இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.