சிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்கCare For Urinary Problemsஉரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இருவழி காணொளிக் காட்சி அதாவது பரமஹம்ஸ நித்யானந்தரின் நயனதீட்சை மூலமோ அல்லது நேரடி ஸாந்நித்யத்திலோ இல்லாமல், பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதல் இன்றி, நீங்களே பயிற்சிமேற்கொள்ளும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். பரமஹம்ஸ நித்யானந்தரோ அல்லது நித்யானந்த தியானபீடமோ அதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படியோ அல்லது பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அதே ஆஸனத்தில் இருந்தபடியே அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள் 1. பத்மாஸனம் 2. ஸ்வங்க-ச்’ருன்கலகும்பகம் 3. ப்லாவினீகும்பகம் 4. மூர்ச்சனாகும்பகம் 1. பத்மாஸனம் ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33 (விரிவாக்கு) 1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். 2. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும். 3. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். 4. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும். 5. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும். 6. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும். 7. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும். 2. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஸ்வங்க-ச்’ரு’ங்கலாகும்பக: கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-178 (விரிவாக்கு) செய்நுட்பம் 1. சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றவும். 2. முடிந்தளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்தவும். 3. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு வெளியே நிறுத்த முடியாதபோது உடம்பு தானே சுவாசத்தை உள்ளே எடுத்துக்கொள்ள அனுமதிக்கவும். 4. மீண்டும் சுவாசத்தை வெளியேற்றி நிறுத்தவும். 5. சுவாசத்தை முடிந்தளவு நேரம் வெளியே நிறுத்தவும். 6. இதனை 21 முறைகள் செய்யவும். 3. பத்மாஸனத்தில் இருந்தபடியே ப்லாவினீகும்பக: கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-171 (விரிவாக்கு) செய்நுட்பம் 1. தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள். 2. சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள். 3. தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வையுங்கள். 4. முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும். 5. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுபடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள். 6. இதனை 21 முறைகள் செய்யவும். இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10 -15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும். 4. பத்மாஸனத்தில் இருந்தபடியே மூர்ச்சனாகும்பக: கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-170 (விரிவாக்கு) செய்நுட்பம் 1. சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள். 2. தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வையுங்கள். 3. சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். 4. முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள். 5. இதை 21 முறைகள் செய்யுங்கள். இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|