மூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா
Care For Arthritis
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பத்ராஸனம்
- சூ’ன்யககும்பகம்
- கேவலகும்பகம்
- போரோலிகாகும்பகம்
- த்ராடககும்பகம்
- வாமகதிகும்பகம்
- குமுதகும்பகம்
- க்ரமநேத்ரகும்பகம்
1. பத்ராஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகம் 37 (விரிவாக்கு) அத பத்ராஸனம்
குல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்’வயோ: க்ஷிபேத் /
பார்ச்’வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு’டம் பத்த்வா து நிச்’சலம் // 37
மொழிபெயர்ப்பு
பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமருங்கள். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமருங்கள்.

செய்நுட்பம்- கால்களை நீட்டி அமருங்கள்.
- தரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
- ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, பிறப்புறுப்பிற்கும் வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
- இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமருங்கள்.
- இந்த நிலையிலேயே 30 நொடிகள் நீடிக்கவும்.
2. பத்ராஸனத்தில் இருந்தபடியே
சூ’ன்யககும்பக:,
ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள் அத சூ’ன்யககும்பக:
பூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு’ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /
ஸர்வாகஸ்ய-ஆகுஞ்சநேன கும்பிதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //
பார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/
மொழிபெயர்ப்பு
இந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் நிமிர்ந்து உட்காரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யவும்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
3. பத்ராஸனத்தில் இருந்தபடியே
கேவலகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 64 (விரிவாக்கு)
அத கேவலகும்பக:
ரேசகம் பூரகம் த்யக்த்வா ஸுகம் யத்வாயுதாரணம் /
ப்ராணாயாமோண்யமித்யுக்த: ஸ வை கேவலகும்பக: //
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுத்தலோ அல்லது சுவாசத்தை வெளிவிடுதலோ அல்லாமல் சுவாசத்தை நிறுத்தி வைத்தலில் (கும்பகத்தில்)மிகச் சுலபமாக இருப்பது கேவலகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமருங்கள்.
- சுவாசத்தைக் குறிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
- உங்களால் முடியாதபோது தளர்வாகவும்.
- மூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும்.
- இதை 21 முறை செய்யவும்.
4. பத்ராஸனத்தில் இருந்தபடியே
போரோலிகாகும்பக:,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481
அத ஸஹிதகும்பக:
பூர-ரேசயுத: கும்போ வாயோர்-யத்ர விதீயதே /
ஸஹித:கும்பக: ஸ ஸ்யாத் ஸஹித: ஸர்வஸித்தயே // 85
மொழிபெயர்ப்பு
பூரக ரேசகத்துடன் மூச்சு நிறுத்தப்படும்போது ஸஹிதகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமருங்கள்.
- ‘ம்ம்ம்’ என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
- சிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமருங்கள்.
5. பத்ராஸனத்தில் இருந்தபடியே
த்ராடககும்பக:, ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமருங்கள்.
- நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
- முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
6. பத்ராஸனத்தில் இருந்தபடியே
வாமகதிகும்பக:,
ஹட ஸங்கேத சந்த்ரிகா 10வது அத்யாயம், 28வது வரி
செய்நுட்பம்
- இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்நிறுத்துங்கள்.
- இனியும் சுவாசத்தை உள்நிறுத்த முடியாது எனும்போது, நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
7. பத்ராஸனத்தில் இருந்தபடியே
அத குமுதகும்பக:
பூரயேச்சந்த்ரமார்கேண தாரயித்வாத்வஜாயுதே /
ரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு’த: // 190
மொழிபெயர்ப்பு
இடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாசத்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமருங்கள்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை நிறுத்துங்கள்.
- உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
8. பத்ராஸனத்தில் இருந்தபடியே
க்ரமநேத்ரகும்பக:,
அத க்ரமநேத்ரகும்பக:
ஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191
மொழிபெயர்ப்பு
வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமருங்கள்.
- வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- இதை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.