by tamilkriyaupdate | Tue, 2014-01-21 17:33
நிறப்பார்வையின்மை குறைபாடு குணமடையCure for Achromatopsia உரிமை மறுப்பு (Disclaimer) இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம். முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் அனைவரும் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது. இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பு: கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது. கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும். பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்- பர்வதாஸனம்
- சீ’தலீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணயாமம்
- ருத்ராஸனம்
- திரிநேத்ரகும்பகம்
- த்ரிசூ’லகும்பகம்
1.பர்வதாஸனம், யோக ரஹஸ்யம், அத்யாயம் 5, ஸ்லோகம் 22 (விரிவாக்கு) அத பர்வதாஸனம் மூத்ரபிண்ட-யக்ரு’த்-ப்லீஹவபா-சு’த்தயே நிரந்தரம் / உபவிச்’ய ச ஸுப்தாக பர்வதாஸனமப்யஸேத் // 22
செய்நுட்பம் - வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங்கைகளை இணைத்துக் கொள்ளவும்.
- இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
(இந்த ஆஸனத்தை உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஆனால் கீழ்வரும் கும்பகங்களை உட்கார்ந்த நிலையிலேயே செய்யவும்) 2.பர்வதாஸனத்தில் இருந்தபடியேசீ’தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73,74 (விரிவாக்கு) அத சீ’தலீகும்பக: ஜிஹ்வயா வாயுமாக்ரு’ஷ்ய உதரே பூரயேச்சனை: / க்ஷணம் ச கும்பகம் க்ரு’த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ’தலீ-கும்பகம் சு’பம் / அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம் - பர்வதாஸனத்தில் இருந்தபடியே கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
3.பர்வதாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43 (விரிவாக்கு) அத ஸீத்காரீ ப்ராணாயாமம்: ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் / ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம் - பர்வதாஸனத்தில் இருந்தபடியே பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுக்கவும். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 7 நிமிடங்கள் செய்யவும்.
4.ருத்ராஸனம், யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 25 (விரிவாக்கு) அத ருத்ராஸனம் பகதலீ ஸம்புட கரி ஹாதஸ்யௌ பக உசாஈ / பகாகா அங்குடா தோஉ லேஊ பரலீகானீ தாலவை லகாவை / பசை தோஉ ஹாத பகாமாஹே கரி நீசை கரி சீரை ஆணி / பகாகீ ஆகல்யாபர காங்கஸீ கரை த்ரிஷ்டி நாஸா அக்ர / ஆஸன கௌகுண ஊத்ர பிஷை கஹீ பாதி கௌ ரோக ஹோஈ / யதி யஹு ஆஸண கரீ ஆகானை ஸோவை ஜைஅவரஜாஈ / காரோகபீடா ஹோஈதௌ யஹு ஆஸண கரி மூலத்வார டேகி தரதி / ஸ்யௌபைஸை ஜைரோகனஹோஈ தௌ ஸூஇசா ஆஸன ரீபௌ ரை // 25.
செய்நுட்பம்
- தரையில் அமர்ந்து கொள்ளவும், படுத்துக் கொண்டும் இதைச் செய்யலாம்.
- இரு குதிங்கால்களுக்கு அடியில் கைகளை நுழைத்து, இடது கையால் இடது பாதத்தையும் வலது கையால் வலது பாதத்தையும் பிடித்துக் கொள்ளவும்.
- குதிங்கால்களை மார்பை நோக்கிக்கொண்டு வரவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
இந்தச் சுற்றானது கண்ணில் உள்ள சக்திச்சுற்றை நிறைவடையச் செய்து பார்வையைத் தெளிவாக்கும். 5.ருத்ராஸனத்தில் இருந்தபடியே,த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79 (விரிவாக்கு) அத த்ரிநேத்ரகும்பக: ஸக்ரு’ச்சந்த்ரேண சாபூர்ய தார்ய ஸூர்யேண பூரயேத் / நியம்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி // த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //
மொழிபெயர்ப்பு இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் திரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யவும்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதை 21முறை செய்யுங்கள்.
6.ருத்ராஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ’லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193 (விரிவாக்கு) அத த்ரிசூ’லகும்பக: கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா / த்ரிசூ’லினா த்ரிசூ’லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ’லனுத் // 193
மொழிபெயர்ப்பு எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம் - அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடவும்.
- இதனை 21 முறை செய்யவும்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.
|