கருப்பைக் கட்டி வராமல் காக்க
Care For Polycystic Ovaries
உரிமை மறுப்பு (Disclaimer)
இந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
முக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.
இங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
கிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.
கைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
1. மூல பந்தம்
2. உட்டீயான பந்தம்
3. ஜாலந்தரபந்தம்
1. மூல பந்தம்,
அத மூல பந்தம்
பார்ஷ்ணினா வாமபாதஸ்ய யோனிமாகுஞ்சயேத் தத: /
நாபிக்ரந்திம் மேருதண்டே ஸம்பீட்ய யத்னத: ஸுதீ: // 3-14
மேட்ரம் தக்ஷிண-குல்பே து-த்ரு’டபந்தம் ஸமாசரேத் /
ஜராவிநாசி’னீ-முத்ரா மூலபந்தோ நிகத்யதே // 3-15
மொழிபெயர்ப்புமூல பந்தம் என்றழைக்கப்படும் இந்த முத்ராவில், பயிற்சியாளர் தனது இடது குதிகாலை ஆஸனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தி, ஆஸனவாயை இறுக்கிச் சுருக்கிக்கொள்ள வேண்டும். நாபிக்கருகில் இருக்கும் குடல் பகுதியை உட்பக்கமாகக் கவனத்துடன் சுருக்கி முதுகெலும்பைத் தொடுமாறு வைத்து, வலது குதிகாலை பிறப்புறுப்பிற்கு மேல் வைக்கவும். இந்த முத்ரா வயது முதிர்வதைத் தவிர்க்கிறது.

செய்நுட்பம்
- இடது குதிகாலை ஆஸனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் வைத்து அழுத்தவும்.
- வலது குதிகாலை பிறப்புறுப்பிற்கு மேல் வைக்கவும்.
- ஆஸனவாயை இறுக்கிச் சுருக்கவும்.
- நாபிக்கருகில் இருக்கும் குடல் பகுதியை முதுகெலும்பைத் தொடுமாறு உட்பக்கமாகக் கவனத்துடன் சுருக்கவும்.
2. மூல பந்தத்தில் இருந்தபடியே
உட்டீயான பந்த:,
அத உட்டீயான பந்த:
உதரே பச்’சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்’ராந்தம் மஹாகக: /
உட்டீயானம் த்வஸௌ பந்தோ ம்ரு’த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)
மொழிபெயர்ப்புதொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுக்கவும். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டீயான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்- தொடர்ந்து அதே ஆஸனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
- சுவாசத்தை ஆழமாக உள்ளிழுக்கவும். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்.
- வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீதுவைக்கவும்.)
- அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின்
பின்பக்கத்தைத் தொடவேண்டும். - முடிந்தவரை சுவாசத்தை வெளியேயே நிறுத்தி வைக்கவும்.
- இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
- அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
- பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. மூல பந்தத்தில் இருந்தபடியே
ஜாலந்தரபந்த:,
அத ஜாலந்தரபந்த:
கண்ட-ஸங்கோசனம் க்ரு’த்வா சிபுகம் ஹ்ரு’தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு’தே பந்தே ஷோடச’ாதார-பந்தம் //3-12
மொழிபெயர்ப்பு தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் மூடிவிட முடியும்.
செய்நுட்பம்- தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- சுவாசத்தை முழுமையாக உள்ளிழுக்கவும்.
- தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
- மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தவும்.
- ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள்.
- இதை 21 முறைகள் செய்யுங்கள்.
இத்துடன் இக்கிரியா முடிவுற்றது.